
யூத் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் காலெக்ஷன் எவ்ளோ தெரியுமா!
யூத் திரைப்படம் வெளியாகி 20 நாட்களைக் கடந்து வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை கென் கருணாஸ் இயக்கி அவரே ஹீரோவாகவும் நடித்தும் உள்ளார். கெனுக்கு ஜோடியாக மூன்று ஹீரோயின்கள் இப்படத்தில் அனிஷ்மா அனில்குமார், மீனாக்ஷி, பிரியன்ஷி யாதவ் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படம் இளைஞர்களுக்கு ஏற்றாற்போல் இருப்பதால், அனைத்து தரப்பினராலும் அதிகம் பார்க்கப்படுகிறது. இப்படம் வெளியாகி முதல் நாளிலிருந்து வசூலை வாரிக்குவித்துவருகிறது, 20 நாட்கள் கடந்த நிலையில், யூத் திரைப்படம் 75 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் இத்திரைப்படம் வெற்றிகரமாக இன்னும் சில வாரங்களைக் கடந்து வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பாக்கப்படுகிறது.
இந்த வருட ஆரம்பத்தில் வசூல் வேட்டை நடத்திய படங்களில் யூத் திரைப்படமும் இணைந்துள்ளது. இதற்குமுன்னர் வித் லவ், தாய் கிழவி போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்று தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
