
“மீசைய முறுக்கு 2” படம் எப்போ ரிலீஸ் தெரியுமா!
தமிழ் சினிமாவில் ராப் இசையைப் பிரபலமடைய முக்கிய காரணமாக இருந்தவர் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி அவர்கள், இவர் இசையமைப்பது மட்டுமில்லாமல் நடிப்பு, டைரெக்ஷன் என அவரின் திறமைகளைக் காட்டிக்கொண்டுள்ளார். முக்கியமாக இவர் இயக்கிக் கதாநாயகனாக நடித்த படம் மீசைய முறுக்கு இப்படம் 2017 ஆம் ஆண்டு வெளியாகி அவருக்குத் தனி ரசிகர்கள் பட்டளாமே உருவானது. குஸ்பு சுந்தர் சி இப்படத்தைத் தயாரித்திருந்தார்.
அதற்குப் பிறகு ஹிப்ஹாப் தமிழா ஆதி அவர்களின் படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாமல் சென்றது. இந்நிலையில் ஹிப்ஹாப் தமிழா ஆதி மீண்டும் அவர் இயக்கிய மீசைய முறுக்கு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி நடித்துள்ளார், இந்தப்படத்தில் கேட்டிகா ஷர்மா, சைத்ரா, யோகிபாபு, ஹர்சத் கான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. குறிப்பாக “ஆரா 10/10” பாடல் இளைஞர்களிடம் ஒரு ட்ரெண்ட் ஆகா மாறியுள்ளது.
இதனைத் தொடர்ந்து மீசைய முறுக்கு 2 படத்தின் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதாகவும், இப்படத்தை கோடை விடுமுறைக்கு வெளியிடலாமெனப் படக்குழு படத்தின் பணிகளை வேகமாக மேற்கொண்டுவருவதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்தப் படம் முதல் பாகத்தைப் போல நல்ல வரவேற்பை பெருமா எனப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
