
இந்த வார OTT ரிலீஸ் என்னென்ன தெரியுமா!
சினிமா ரசிகர்கள் திரையரங்குகளில் எப்படி படங்களைக் கொண்டாடுகிறார்களோ அதே போல OTT-ல் வரும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களை கொண்டாடி வருகின்றனர். மேலும் திரையரங்குகளுக்குச் சென்று பார்க்க முடியாத ரசிகர்கள் தனக்கு பிடித்தமான படங்களை OTT மூலம் பார்த்து ரசிக்கின்றார்கள். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் பல மொழிகளில் படங்கள், வெப் சீரிஸ் வாரம் அல்லது மாதம் முழுதும் வெளியிடப்படுகிறது, இந்த வாரம் சில முக்கியமான படங்கள் மற்றும் வெப் சீரிஸ் ரிலீஸ் ஆக இருக்கிறது.
தாய் கிழவி :
இப்படம் ராதிகா சரத்குமார் நடிப்பில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளிவந்து திரையரங்கில் வசூல் சாதனை படைத்தது, தாய் கிழவி படத்தின் OTT ரிலீசிற்கு ஒரு கூட்டமே காத்துருக்கிறது எனக் கூறலாம், இப்படம் ஏப்ரல் 10-ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது.
தி பாய்ஸ் :
இது ஒரு ஆங்கில வெப் சீரிஸ் இதற்க்கு தனி ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. இது சூப்பர் ஹீரோஸ் சீரிஸ் ஆகும், இதன் முன்னர் வெளியான சீசன்கள் அனைத்துமே மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில் ஏப்ரல் 8-ம் தேதி இதன் அடுத்த சீசன் அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ளது.
பிக் மிஸ்டேக் :
இது ஒரு கிரைம் த்ரில்லர் சீரிஸ் ஆகும். இதில் செய்யும் ஓர் சிறு திருட்டு எந்த அளவிற்கு அவர்களைப் பாதிக்கிறது என்பது கதையாகும். இந்தத் தொடர் நெட்பிலிக்ஸில் ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகவுள்ளது.
இதில் தமிழ் ரசிகர்களிடையியே தாய் கிழவி படம் OTT ரிலீஸ்க்கு பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
