
லீடர் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் காலெக்ஷன் இவ்ளோவா!
கொடி, காக்கிசட்டை, எதிர்நீச்சல் வெற்றி படங்களின் இயக்குனர் துரை செந்தில்குமார் புதிதாக இயக்கி வெளிவந்திருக்கும் படம் லீடர். இப்படத்தில் லெட்ஜென்ட் படத்தின் மூலம் திரைத்துறையில் அடியெடுத்து வைத்துப் பல விமர்ச்சனங்களை சந்தித்த நடிகர் லெட்ஜென்ட் சரவணன் ஹீரோவாக நடித்துள்ளார், இவருக்கு ஜோடியாக ராஜ்புட் பயல் நடித்துள்ளார். இப்படம் ஏப்ரல் 3 ஆம் தேதி வெளியானது.
இப்படம் வெளியான முதல்நாளிருந்தே பாசிட்டிவ் ரெவியூஸ் மட்டும் வந்தவண்ணம் உள்ளது. இப்படம் ஒரு ஆக்ஷன் கலந்த படமாக உருவாகியுள்ளது, மேலும் லெட்ஜென்ட் சரவணன் நன்றாக நடித்துள்ளார் எனவும் ஆக்ஷன் காட்சிகள் மிகச் சிறப்பாக வந்துள்ளதாகவும் படத்தைப் பார்த்த ரசிகர்கள் கூறியுள்ளனர். தொடர்ந்து இப்படம் நல்ல விமர்சனங்களை வாங்கிக்கொண்டு திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் லீடர் படத்தின் வசூல் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது, இப்படம் மூன்று நாட்களில் 25 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இம்மாதம் வெளிவந்த படங்களில் குறுகிய நாட்களில் அதிக வசூல் செய்த படம் இதுவாகும். மேலும் இப்படம் வசூல் செய்து ரசிகர்களிடம் வரவேற்ப்பை பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.
