
லெஜென்ட் வந்த தள்ளிப் போய்த்தான் ஆகணும் – எல்.ஐ.கே ரிலீஸ் ஆகலையா!
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏப்ரல் மாதம் 3-ம் தேதி வெளியாக இருந்த எல்.ஐ.கே படம் சொன்ன தேதியில் ரிலீஸ் ஆகாமல் மீண்டும் தள்ளிப்போனது. இப்படம் ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாகும் எனத் தகவல்கள் வந்துள்ளது.
இதுதான் சரியான நேரம் எனக் காலத்தில் களம் இறங்கினர் லெட்ஜென்ட் சரவணன். இவர் முன்னதாக நடித்த லெஜென்ட் படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை என்று நல்ல கதை மற்றும் தமிழ் சினிமா ரசிகர்களிடம் எதிர்பார்ப்புள்ள ஸ்கிரிப்ட் ச்சூஸ் பண்ணனும்னு பல இயக்குனர்களிடம் கதைகள் கேட்டு எதிர்நீச்சல், காக்கிசட்டை, பட்டாஸ், கொடி, போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் துரை செந்தில் குமாருடன் சேர்ந்து லீடர் படத்தில் நடித்திருந்தார், இந்தப் படத்தின் ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்தநிலையில் எல்.ஐ.கே படம் தள்ளிப்போனதால் லீடர் படம் ஏப்ரல் 3-ம் தேதி ரிலீஸ் செய்யப் படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்துக்கு போட்டியாக நடிகர் பரத் நடித்துள்ள காளிதாஸ் படம் வெளியாகவுள்ளது.
