
தேர்தல் முடியும் வரை TN 2026 படத்துக்குத் தடையா!
நட்டி நட்ராஜ் நடிப்பில் உமாபதி ராமைய்யா இயக்கத்தில் அரசியல் கலந்த நகைச்சுவை படமாக உருவாக்கப்பட்ட படம் TN 2026. இந்தப் படத்தின் ட்ரைலர் வெளியாகி அரசியல் மற்றும் விஜய் ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளானது.
இந்தப் படத்தில் விஜயின் அரசியல் பயணத்தைக் குறிவைத்து எடுக்கப்பட்டதாகவும், விஜயை அசிங்கப்படுத்துவதாகவும் அவரின் ரசிகர்கள் பேசிய நிலையில் TN 2026 படத்தின் இயக்குனர் உமாபதி “விஜய் சார் ஒரு சிங்கம் அவரை அசிங்கப்படுத்த முடியாது படத்தைப் பார்த்தபின் பேசுங்கள்” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் இப்படத்தை தேர்தல் காலகட்டத்தில் வெளியிட்டால் வாக்காளர்களைத் தவறான வழியில் கொண்டு செல்லும் எனச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. படக்குழு தரப்பில் இப்படம் ஒரு கற்பனை கதை எந்த ஒரு அரசியல் கட்சியும், தனிநபரையும் குறிப்பிட்டு எடுக்கப்படவில்லையெனக் கூறப்பட்டுள்ளது, இந்த வழக்கை விசாரித்து விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி கூறியுள்ளார். படத்தை ஏப்ரல் 10-ம் தேதி வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில் இப்படதின் தீர்ப்பு ஏப்ரல் 10 ம் தேதிக்குள் வருமா என எதிர்பார்க்கப்படுகிறது.
