
2026-ல் மிகுந்த எதிர்பார்ப்புகளுடம் வெளியாகவிருக்கும் தமிழ் படங்கள்!
தமிழ் சினிமாவில் வார வாரம் சில படங்கள் வெளியாகிக்கொண்டுதான் இருக்கிறது, அதில் சில படங்கள் மட்டும் வசூல் வேட்டை நடத்தி நல்ல வரவேற்பை பெறுகிறது, மேலும் சில சிறிய பட்ஜெட் படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்று பிளாக் பஸ்டர் லிஸ்டில் இணைகிறது. இதில் குறிப்பாக 2026 ஆம் ஆண்டு தொடக்கத்தில் பல படங்கள் நல்ல வரவேற்பு பெற்றது. வித் லவ், தாய் கிழவி, யூத், துராந்தர் 2 தற்போது வெளியாகியுள்ள LIK போன்ற படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது ரசிகர்களிடம் மிகுந்த எதிர்ப்புகளைக் கிளப்பியுள்ள படங்களைக் காணலாம்.
கர:
கர திரைப்படம் தனுஷ் நடிப்பில் போர்த்தொழில் படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள படம் இது. இதில் தனுஷிற்கு ஜோடியாக மாமிதா பைஜூ நடித்துள்ளார், இப்படத்தின் இசைவெளியீட்டு விழா கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. கர படம் ஒரு ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகியுள்ளது, இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இத்திரைப்படம் வருகிற ஏப்ரல் 30 ஆம் தேதி திரையரங்குகளில் உலகம்முழுவதும் வெளியாகவுள்ளது.
கருப்பு:
நடிகர் ஆர். ஜே பாலாஜி இயக்குனராகக் களமிறங்கி இயக்கியுள்ள படம் கருப்பு. இப்படத்தில் நடிகர் சூர்யா, நடிகை திரிஷா ஆகியோர் நடித்துள்ளனர். சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார், படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டியெல்லாம் ஹிட். நடிகர் சிலம்பரசன் இப்படத்தில் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் இசைவெளியீட்டு விழா இம்மாதம் ஏப்ரல் 26 ஆம் தேதி மதுரையில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் கருப்பு திரைப்படம் அடுத்த மாதம் மே 15 ஆம் தேதி திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளிவருமென எதிர்ப்பகிர்க்கப்படுகிறது.
ஜனநாயகன்:
நடிகர் விஜயின் கடைசி படமான ஜனநாயகன் படத்தை ஹச். வினோத் இயக்கியுள்ளார். இப்படம் 2026 முதலே வெளியாகுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சென்சார் செர்டிபிகேட் வழங்குவதில் சிக்கல் நீடித்து வருகிறது, இதுவரை படத்தின் வெளியீட்டு தேதி வரவில்லை. ஆனால் ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்து பல சர்ச்சைகளுக்குள்ளானது. இருந்தாலும் ஜனநாயகன் படத்தைத் திரையரங்குகளில் தான் பார்ப்போம் என ரசிகர்கள் சிலர் இருக்கும் நிலையில் ஜனநாயகன் படத்தின் இயக்குனர் ஹச். வினோத் அவர்கள் படத்தைச் சில காட்சிகளை மறு உருவாக்கம் செய்து வெளியிடுவதாகக் கூறியுள்ளார். இப்படம் அடுத்த மதம் அதாவது மே மதம் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
டாக்ஸிக்:
கே.ஜி.எப் படத்தில் தனது நடிப்பால் மிரட்டிய யாஷ் நடிப்பில் புதிதாக உருவாகியுள்ள திரைப்படம் டாக்ஸிக். இப்படத்தில் நயன்தாரா, கியார அத்வானி, ருக்மணி வசந்த் போன்ற முன்னணி நடிகைகள் நடித்துள்ளனர், இப்படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்புகளில் உள்ள முக்கியமான படமாகும். மலையாளதில் பல படங்களை இயக்கிய கீது மோகன்தாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்புகளை எகிற வைத்தது எனக் கூறலாம். டாக்ஸிக் திரைப்படம் ஜூன் 4 ஆம் தேதி உலகம்முழுவதும் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவில் 2026 ஆம் ஆண்டு இன்னும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2, LCU தொடரில் உள்ள பென்ஸ், லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள DC, காஞ்சனா 4, தனிஒருவன் 2 போன்ற பெரிய படங்கள் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
