
யூத் படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா!
யூத் படம் கடந்த மாதம் வெளியான முதல் நாளில் இருந்தே வசூல் மற்றும் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வந்தது. தற்போது உலகம் முழுவது இப்படம் 82 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் வெளிவந்துள்ளது.
கென் கருணாஸ்:
அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில் தனது அப்பாவான கருணாஸ் உடன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் அசுரன் படத்தில் தனுஷின் மகனாக நடித்துப் பலரின் கவனத்தை ஈர்த்தவர் கென் கருணாஸ். மேலும் இவர் வாத்தி, விடுதலை 2 போன்ற படங்களிலும் நடித்துத் தனக்கான முத்திரையைப் பதித்தார். இவர் தற்போது இயக்குனராகவும் ஹீரோவாகவும் நடித்துக் கடந்த மாதம் வெளிவந்துருக்கும் படம் யூத் திரைப்படம்.
யூத் திரைப்படம்:
பார்வதா என்டேர்டைன்மெண்ட் தயாரிப்பில் கென் கருணாஸ் இயக்கி நடித்திருக்கும் இந்த யூத் திரைப்படம். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இயமைத்துள்ளார். இப்படத்தின் பாடல் படம் வருவதற்கு முன்பே ட்ரெண்ட் ஆனது. இப்படத்தில் மீனாக்ஷி, அனிஷிமா அனில்குமார், ப்ரியன்ஷி யாதவ் போன்ற மூன்று இளம் நடிகைகள் கெனுக்கு ஜோடியாக நடித்துள்ளனர். யூத் படம் ஒரு ஸ்கூல் லவ் மையமாகக் கொண்டு உருவான படமாகும். இதில் ஸ்கூல் படிக்கும் மாணவனாகக் கென் கருணாஸ் நடித்திருக்கிறார். இந்தப் படம் யூத் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதுவரை யூத் கலெக்ஷன்:
படம் வெளியான முதல் நாளிலிருந்து ரசிகர்களின் மிகுந்த வரவேற்பை பெற்று வசூலை வாரிக் குவித்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் 50 கோடி வசூல் செய்ததை முன்னிட்டு பிரியாணி செய்து படக்குழுவினர் அனைவருக்கும் விருந்தளித்தனர். மேலும் யூத் திரைப்படம் இதுவரை உலக அளவில் ரூபாய் 82 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாம், இதைத் தயாரிப்பு நிறுவனம் ஒரு போஸ்டர்மூலம் தமது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
யூத் திரைப்படம் மேலும் சில நாட்கள் திரையரங்குகளை ஆக்கிரமித்து ரசிகர்களின் மிகுந்த வரவேற்பை பெற்று 100 கோடி வசூல் செய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது.
