
ஜனநாயகன் படம் லீக் – முக்கிய குற்றவாளிகள் கைது!
நடிகர் மற்றும் தவெக கட்சியின் தலைவருமான விஜய் அவர்களின் கடைசி படமான ஜனநாயகன் கடந்த சில தினங்களுக்கு முன்பு இணையதளத்தில் லீக் செய்யப்பட்டது. இதுகுறித்து இப்படத்தின் இயக்குனர் கடுமையாகக் கண்டித்திருந்தார். மேலும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சைபர் கிரைமில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு 6 பேர் கைது செய்யப்பட்டு விசாரித்து வந்த நிலையில் மேலும் மூன்று முக்கிய குற்றவாளிகள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜனநாயகன் படம் சென்சார் செர்டிபிகேட் வழங்குவதில் தாமதமான நிலையில் தற்போது படம் லீக் ஆகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியது, இப்படத்தின் எடிட்டர் பணிக்காகப் பிரீலாஞ்சர் ஒருவரிடம் கொடுக்கப்பட்டது, அவர் யாருக்கும் தெரியாமல் படத்தின் எடிட்டிங் சீன்ஸ் அனைத்தும் வேறு நபர்களுக்குப் பகிரப்பட்டது தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில் முன்னதாக ஆறு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களோடு பிரீலாஞ்சர் மூன்று பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தகவல்கள் வந்துள்ளது.
