
செம்ம காலெக்ஷன், வசூல் வேட்டையில் LIK!
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நேற்று ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான படம் லவ் இன்சூரன்ஸ் கம்பனி (LIK), இப்படத்தை முதலில் சிவகார்த்திகேயனை வைத்து விக்னேஷ் சிவன் எடுப்பதாக இருந்ததாம் பிறகு சில பல காரணங்களால் அது நடக்காமல் போனதாம், பின்னர் சென்சேஷனல் ஹீரோவான பிரதீப் ரங்கநாதனிடம் இப்படம் வந்து சேர்ந்தது.
விக்னேஷ் சிவனின் கடந்த சில திரைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வசூலில் கோட்டை விட்டுவிட்டது. இதனால் அவர் லவ் டுடே, டிராகன், ட்யூட் போன்ற படங்களை 100 கோடி வசூல் சாதனை செய்யவைத்த நடிகர் பிரதீப் ரங்கநாதனை குறிவைத்து சென்றிருக்கிறார். LIK படம் முடிந்து பல மாதங்கள் கடந்து வெளியிட்டுத் தேதி மாற்றிக்கொண்டு சென்ற நிலையில் இப்படம் இறுதியாக நேற்று வெளியானது. இப்படதின் ட்ரைலர் வெளியான போதே தெரிந்த ஒன்று பியூசரில் ஆப் மூலம் செய்யும் காதல் எப்படி இருக்கும் என்பது தான் கதை என்று. இந்தப் படம் முதல் நாள் நல்ல விமர்சனங்கள் வந்தது.
தற்போது வெளியான LIK படதின் பக்ஸ் ஆபீஸ் காலெக்ஷன் தொடர்ந்துள்ளது, முதல் நாளில் 10 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாம். இப்படம் மேலும் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வசூலை வாரிக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
