
LIK படம் எதிர்காலத்தில் ஓடுமா – விமர்சனம்!
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாராவின் ரவுடி பிக்ச்சர்ஸ் மற்றும் செவன் ஸ்க்ரீன் லலித் குமார் இருவரும் சேர்ந்து தயாரித்திருக்கும் படம் லவ் இன்சூரன்ஸ் கம்பனி (LIK). இப்படத்தில் சென்சேஷனல் ஹீரோவாகத் தற்போது தமிழ் சினிமாவில் இருக்கும் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார், இவருக்கு ஜோடியாகத் தெலுங்கு இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் எஸ். ஜே சூர்யா, யோகிபாபு, சீமான் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இந்தப்படம் பல தடைகளைத் தாண்டி இன்று ஏப்ரல் 10-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்தப் படம் எதிர்காலத்தில் அதாவது 2040 ஆம் ஆண்டு நடக்கும் காதல் கலந்த காமெடி படமாக உருவாகியுள்ளது. கீர்த்தி ஷெட்டியின் அறிமுக காட்சி, எஸ். ஜே சூர்யா மற்றும் பிரதீப் ரங்கநாதனும் சந்திக்குக் காட்சிகள் ரசிக்கும் வண்ணம் உள்ளதாகவும் மேலும் யோகிபாபுவின் காமெடி, விசுவல்ஸ் அதோடு அனிருத் இசையில் வரும் பேக்ரௌண்ட் மியூசிக் அனைத்தும் படத்தின் பலமாக உள்ளதாகவும் படத்தைப் பார்த்த ரசிகர்கள் கூறுகின்றனர்.
இப்படத்திற்கு முக்கிய சிறப்பம்சமே கதைக்களம் 2040 ல் நடப்பதுதான், பிரதீப் ரங்கநாதன் படம் என்றாலே ஒரு கமர்சியால் என்டேர்டைன்மெண்ட் படமாகத் தான் இருக்கும், அவர் நடித்த மூன்று படங்களுமே 100 கோடி வசூல் செய்தது, பொறுத்திருந்து பார்ப்போம் LIK படம் வசூலை வாரித் தருமா என்று.
