
லீடர் படம் 1000 கோடி வசூல் செய்யுமா – படம் எப்படி இருக்கு!
லெட்ஜென்ட் சரவணன் நடிப்பில் எதிர்நீச்சல் இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் இன்று வெளியான படம் லீடர். இப்படம் இன்று 300 திரையரங்குகளில் வெளியாகித் தமிழ் சினிமா ரசிகர்களின் வரவேற்பை பெற்றுவருகிறது.
இப்படத்தில் நடிகர் சாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம். லீடர் படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. முன்னதாக லீடர் படத்தின் ஆடியோ லான்ச்சில் பேசிய லெட்ஜென்ட் சரவணன் விக்ரம், ஜெயிலர் போல மாபெரும் வெற்றி படமாக இருக்கும், 1000 கோடி வசூல் செய்யும் எனக் கூறினார்.
படத்தைப் பார்த்த ரசிகர்கள் படம் நன்றாக இருப்பதாகவும், அப்பா மகள் படமாக இப்படம் இருப்பதாகவும், லெட்ஜென் சரவணனின் ஆக்ஷ்ன் காட்சிகள் சூப்பரா வந்திருப்பதாகவும், இந்தப்படம் 1000 கோடி வசூல் செய்யும் எனவும், தமிழ் சினிமாவிற்கு ஒரு புதிய ஆக்ஷ்ன் ஹீரோ கிடைத்திருப்பதாகவும் ரசிகர்கள் கூறுகின்றனர்.
