
விஜயின் அரசியல் விமர்சனமா! – TN 2026 படத்தின் டீசர்!
உமாபதி ராமைய்யா இயக்கத்தில் நட்டி நட்ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள படம் TN 2026 தங்க நட்சத்திரம். இப்படத்தில் தம்பிராமையா, எம். எஸ். பாஸ்கர், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர்கள் நடித்த நகைச்சுவை கலந்த அரசியல் படமாக உருவாகியுள்ளது.
இப்படத்தின் டீசர் நேற்று வெளியானது, டீசர் வெளியானது முதல் விஜய் ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டங்களில் பேசுபொருளாக ஆனது, இப்படத்தில் விஜய் அரசியல் பயணம்குறித்து எடுக்கப்பட்ட படமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதில் நட்டி நட்ராஜ் விஜய் போலத் தோற்றத்திலும், தம்பி ராமைய்யா TVK பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தோற்றத்திலும் இருப்பது தமிழ் சினிமா ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த டீசரில் “நடிகர்கள் தமிழ்நாட்டில் வாழலாம் ஆனால் ஆளலாமா?” “ஓம் சக்தி பராசக்தி” என விஜயின் அரசியல் களத்தில் நடந்த பல வசனங்கள் இடம்பெற்றுள்ளது. இப்படம் வருகின்ற ஏப்ரல் 10-ம் தேதி தியரங்குகளில் வெளியாகவுள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியநிலையில் இப்படம் ஒரு பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.
