
எல்.ஐ.கே படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போ தெரியுமா!
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள படம் LIK (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி). இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே சூர்யா ஆகியோர் நடித்துள்ளனர். செவன் ஸ்க்கிரீன் ஸ்டுடியோஸ் இந்த படத்தைத் தயாரித்துள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு முடிந்ததும் ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு ஆனால் குறிப்பிட்ட தேதியில் திரைப்படம் வெளியாகவில்லை. மேலும் ரிலீஸ் தேதி அறிவித்துப் பின்னர் தள்ளிக்கொண்டே சென்ற படத்தை இறுதியாக இம்மாதம் அதாவது 10 ஏப்ரல் 2026 அன்று வெளியாகுமென நம்பிக்கையுடன் LIK படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஏப்ரல் 6-ம் தேதி நடத்த படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
