
LIK படத்தின் 5 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா!
LIK திரைப்படம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை உலகம் முழுவது வெளியானது. இப்படத்தை நயன்தாரா மற்றும் செவன் ஸ்க்ரீன் லலித் குமார் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்க்கத்தில் பக்ஸ் ஆபீஸில் மூன்று படங்களைப் பிளாக் பஸ்டர் செய்த நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் இப்படம் வெளியானது. மேலும் கீர்த்தி ஷெட்டி இவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். சீமான், எஸ். ஜே சூர்யா, யோகிபாபு உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வந்த நிலையில் வசூல் செய்வதில் தடை இல்லாமல் சென்று கொண்டுள்ளது. இப்படம் முதல் மூன்று நாட்களில் 25 கோடி வசூல் செய்திருந்தது. தற்போது 5 நாட்கள் கடந்த நிலையில் LIK படம் 45 கோடி வசூல் செய்துள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளது.
தமிழ் சினிமாவில் பெரிய படங்கள் ஏதும் இந்த நேரத்தில் வெளியாகாத நிலையில் இப்படம் இன்னும் சில நாட்கள் திரையரங்குகளை ஆக்கிரமிப்பு செய்து மேலும் வசூல் செய்யுமென ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
