
மேடையில் LIK படத்தின் உண்மையை உடைத்த விக்னேஷ் சிவன்!
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கீர்த்தி ஷெட்டி இணைந்து நடித்திருக்கும் படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இப்படம் கடந்த வாரம் வெளியாகி இதுவரை 50 கோடிக்கும் மேல் வசூல் செய்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் சென்னையில் இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா ஒன்று ஏற்பாடு செய்து நேற்று இந்நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் பிரதீப் ரங்கநாதன், நடிகை கீர்த்தி ஷெட்டி, எஸ். ஜே சூர்யா, இயக்குனர் விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். படத்தின் இசையமைப்பாளர் அனிருத், நயன்தாரா, யோகிபாபு ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது குறிப்பிடத்தக்கது. இதில் விக்னேஷ் சிவன் தனக்கான காமெடி பாணியில் மேடையில் பேசியுள்ளார்.
இன்ப்பிளுயன்சார் அனைவரும் LIK படத்தை தவறாகக் கட்டுகின்றனர், அவர்களுக்குச் செலவு செய்ய எங்களிடம் பணம் இல்லை, இப்படத்தை ஏதாவது நல்லதாகப் பேசி படத்தை ஓட வெய்யுங்கள், விக்னேஷ் சிவன் மேடையில் அதை உடைத்தார், எனத் தம்பனைல் வைத்துப் படத்தை ஓடவையுங்கள், இந்தப் படம் இந்தவாரம் ஓடும் எனப் பலர் காத்திருக்கின்றனர், இன்னும் செட்டில்மென்ட் பண்ணவேண்டியது நிறைய இருக்கு, நடிகர் பிரதீப் ரங்கநாதன் மூன்று படங்களைப் போன்று இந்தப்படமும் 100 கோடி வசூல் எனப் போஸ்டர் ஓட்டணும் அதுக்காக LIK படத்தை ஓடவையுங்கள் என விக்னேஷ் சிவன் பேசினார். மேலும் ஜனநாயகன் படம் லீக் ஆனது மிகவும் கொடுமையானது என அவர் கூறினார்.
