
விஜய் சார் ஒரு சிங்கம் – TN 2026 பட இயக்குனர் உமாபதி!
கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான TN 2026 தங்க நட்சத்திரம் படத்தின் டீசர் விஜயின் அரசியல் குறித்த காட்சிகள் இடம்பெற்றிருந்த நிலையில், விஜய் ரசிகர்கள் மற்றும் அரசியல் ஆர்வலர்களிடையே மாபெரும் பேசும் பொருளாக ஆனது. விஜயை அசிங்கப்படுத்தியதாகப் பலரும் கூறுகையில் இதனை மறுத்துள்ளார் TN 2026 படத்தின் இயக்குனர் உமாபதி ராமைய்யா.
உமாபதி ராமைய்யா:
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது முதல் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஒரு சலசலப்பு இருந்தது, டீசர் வந்தது அனைவரும் விவாதிக்க தொடங்கினர். இந்நிலையில் உமாபதி ராமைய்யா கூறுகையில் “விஜய் சார் ஒரு சிங்கம் அவரை யாராலும் அசிங்கப்படுத்த முடியாது, நானும் அவரோட மிகப்பெரிய ரசிகன், அவரை பார்த்துத் தான் டான்ஸ் ஆட ஸ்டார்ட் பண்ணேன், இந்தப் படத்தில் ஹீரோக்கு நிறைய கெட்டப் இருக்கு இந்த ஒரு கெட்டப் வெச்சு விஜய் சாரை அசிங்கப்படுத்திட்டோம்னு சொல்லாதீங்க” என அவர் கூறியுள்ளார்.
தம்பி ராமைய்யா:
இதைத்தொடர்ந்து தம்பி ராமைய்யாவிடம் ஆதவ் அர்ஜுனா தொடர்பு கொண்டு பேசினாராம். அவரிடம் வெறும் டீசர் மட்டும் பார்த்துவிட்டு ஒரு முடிவிற்கு வர வேண்டாம், இந்தப் படம் TVK – வை தாக்கிப் பேசாது எனத் தம்பி ராமைய்யா கூறியுள்ளாராம்.
