
LIK படத்தின் மூன்று நாள் வசூல் இவ்ளோவா!
செவன் ஷ்கிரீன் லலித் குமார் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் சேர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் டிராகன், ட்யூட், லவ் டுடே போன்ற படத்தில் 100 கோடி வசூல் செய்து தனது நடிப்பில் அசத்திய தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜேச்சூர்யா, யோகிபாபு, சீமான், கௌரி கிசான் போன்ற ஸ்டார்ஸ் நடித்துள்ள படம் லவ் இன்சூரன்ஸ் கொம்பனி (LIK).
இப்படம் கடந்த 10ம் தேதி வெளியானது. வெளியான முதல் நாள் ரசிகர்களிடம் நல்ல விமர்சனம் வாங்கிய நிலையில் தற்போது சில கலவையான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. இது பிரதீப் ரங்கநாதன் படம் தான என யூங்ஸ்டர்ஸ் மத்தியில் பேசிவருகின்றனர். இப்படம் வெளியாகி மூன்று நாள் ஆனா நிலையில் இதன் வசூல் விவரம் வெளிவந்துள்ளது, மூன்று நாட்களில் 25 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாம்.
மேலும் LIK படம் எவ்வளவு நாள் ஓடும் அதன் வசூல் பிரதீப் ரங்கநாதனின் முந்தைய படங்களைப் போன்று 100 கோடி கிளப்பில் இணையுமா எனச் சினிமா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளைக் கிளப்பியுள்ளது.
