
ஜனநாயகன் படத்தின் லீக் 6 பேர் கைது!
நடிகர் விஜயின் கடைசி படமான ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் சட்ட விரோதமாக வெளியிட்ட மர்ம நபர்கள்குறித்து ஜனநாயகன் படக்குழு தரப்பில் சைபர் கிரைமில் வழக்கு தொடர்ந்த நிலையில் சைபர் கிரைம் போலீஸ் படத்தை லீக் செய்த அந்தக் கும்பலைத் தேடி விசாரணை நடத்தி வந்தனர், தற்போது 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களிடம் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
ஜனநாயகன் படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பு இணையத்தில் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, இதுகுறித்து சினிமா பிரபலங்கள் பலர் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி பல தகவல்கள் விரைவில் வெளிவருமென எதிர்பார்க்கப்படுகிறது.
