தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, அரசன், ஜெயிலர் 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையே வெப் சீரிஸ்களிலும் பிஸியாக உள்ளார், இவர் நடித்த வெப் சீரிஸ் விரைவில் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது.
இதற்கிடையே தனக்கு மனதில் என்ன தோன்றுகிறதோ அதை வெளிப்படையாகப் பேசுபவர் விஜய் சேதுபதி. அது எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும் அதை முகத்திற்க்கு நேராகப் பேசிவிடுவார். இவரிடம் ரசிகர்களுக்குப் பிடித்த குணங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும்.
இந்த நிலையில், சமீபத்தில் இவர் பேசிய செய்தி ஒன்று, “எலேக்சன் எல்லாம் நமக்குச் செட் ஆகாது, எதாவது ஒரு பஞ்சாயத்துக்கு தீர்ப்பு சொல்லப்போய் நம்ம படத்தை ஏதாவது செஞ்சு விட்ருவாங்கன்ற பயம் இருக்கிறது” எனக் கூறியுள்ளார். இது இணையத்தில் மிக வைரலாகி வருகிறது.



