
ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் ஆண்ட்ரியா நடிக்கமாட்டாரா!
செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமாசென் ஆகியோர் நடிப்பில் கடந்த 2010 ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். இந்தப்படம் விமர்சன ரிதியாக மட்டுமே வெற்றி படமாக அமைந்தது, எதிர்பார்த்த அளவிற்கு வசூல் ரிதியாக வெற்றி கிடைக்கவில்லை.
சில நாட்களுக்கு முன்பு இப்படத்தை மீண்டும் ரிலீஸ் செய்தது படக்குழு, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ரசிகர்களிடையே ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது என எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது எனக் கூறலாம்.
இதற்கிடையே நடிகை ஆண்ட்ரியா ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நடிக்கமாட்டேன் எனக் கூறியுள்ளார், முதல் பாகத்தில் நடித்தது மிகப்பெரிய அனுபவத்தைக் கொடுத்தது, அதற்க்கு பிறகு நடித்த படங்கள் சுலபமாக இருந்தது, நான் மீண்டும் இரண்டாம் பாகத்தில் நடிப்பேன் என்று எதிர்பார்க்காதீர்கள், செல்வராகவன் படத்தில் நடிப்பது எளிதானது அல்ல என அவர் கூறியுள்ளார்.
