கென் கருணாஸ் இயக்கி நடித்திருக்கும் படம் யூத் அந்தப் படம் திரையரங்குகளின் வெற்றி படமாக ஓடுகிறது, இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமா துறையில் சில முன்னணி நடிகர்கள் யூத் படக்குழுவினரை நேரில் அழைத்து வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர், முன்னதாக நடிகர் சிம்பு கென் கருணாஸை நேரில் அழைத்து வாழ்த்துகள் தெரிவித்தார்.
நடிகர் சிம்புவை தொடர்ந்து நடிகர் சூர்யா மற்றும் அவரது தம்பி நடிகர் கார்த்தி ஆகியோர் யூத் படக்குழுவை நேரில் அழைத்துப் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இது கென் கருணாஸ் அவர்களுக்கு ஒரு உந்துகோளாக இருக்கும் என் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
யூத் படம் தற்போது வரை 35 கோடிக்கு மேல் அதிகமா வசூல் செய்துள்ளது எனத் தகவல்கள் வருவது குறிப்பிடதக்கது.



