சூர்யா நடிப்பில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கருப்பு இந்தப் படத்தில் திரிஷா, ஸ்வாசிகா, மற்றும் யோகி பாபு போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் ட்ரைலர் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது, சாய் அப்யங்கர் இசையில் பாடலை கேட்டுக் கருப்பு படத்திற்காக சூர்யா ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இதனிடையே இரண்டாம் பாடலை சிம்பு படியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கருப்பு படத்தின் OTT உரிமையை நெடிப்பிலிஸ் நிறுவனம் 35 கோடிக்கு வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில் இப்படம் வருகிற மே மாதம் 4 ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.



