நடிகர் சூர்யா நடித்து அடுத்த மாதம் வெளிவரவுள்ள படம் கருப்பு இந்தப் படத்தை ஆர் ஜே பாலாஜி இயக்கியுள்ளார். இப்படம் ஏப்ரல் 14 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார்.
தற்போது இந்தப் படத்தின் பாடல் ஒன்று யூடியூபில் வெளியாகியுள்ளது, ‘நாங்க நாலு பேரு’ என்று பாடலின் தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது. இது லிரிக் வீடியோவாக யூடியூபில் நேற்று வெளியாகியுள்ளது.
இதற்கு முன்பு வெளியான ‘God Mode’ பாடல் தமிழ் சினிமா ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இந்தப் படத்திற்க்கு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.



