ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது, இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார், இப்படத்தில் ரம்யாகிருஷ்ணன், யோகி பாபு, மிர்னா, சிவராஜ்குமார் ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களோடு கிங் கான் ஷாருக்கான் அவர்கள் கஸ்ட் ரோல் செய்வதாகத் தவல்கள் வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ஜெயிலர் 2 படத்தில் ரஞ்சிகாந்த்துடன் பலவருடங்கள் கழித்து தளபதி படத்தில் நடித்த நடிகை ஷோபனா அவர்கள் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது, ஆனால் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இப்படம் இந்தவருடம் ஜூன் மாதம் வெளியாகும் எனச் சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது, படக்குழுவிடமிருந்து நம்பத் தகுந்த அறிவிப்பு வரும் வரை காத்திருப்போம்.



