செல்வராகவன் இயக்க்கத்தில் 2006 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான படம் புதுப்பேட்டை இது ரவுடி மற்றும் அரசியல் கலந்த படமாக வெளிவந்தது. இந்தப் படம் மாபெரும் வெற்றி படமாக இருந்தது. தனுஷின் கரியரில் இது ஒரு முக்கியமான படமாகவும் இருந்தது.
இந்தப் படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில் செல்வராகவன் படம் இயக்குவதை விட நடிப்பதில் ஆர்வம் காட்டுவந்தார், எங்குச் சென்றாலும் புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகம் எப்போது என அனைவரும் கேட்டுவந்த நிலையில் புதுப்பேட்டை 2 படத்தின் பணிகள் நடந்துகொண்டு இருக்கிறது எனக் கூறிவந்த செலவராகவன் தற்போது புதுப்பேட்டை 2 படத்தின் கதை ரெடி ஆகியது எனத் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.
இந்த செய்தியைக் கேட்டு ரசிகர்கள் மிக மகிழ்ச்சியுடனும் ஆர்வமுடனும் இருக்கின்றனர். இப்படத்தின் பணிகள் கூடிய விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல வருடங்களுக்குப் பிறகு ரஜினியுடன் இணையும் நடிகை யாருன்னு தெரிஞ்சிக்க கிளிக் செஞ்சு பாருங்க!



