Home » விஜய்சேதுபதி, மணிரத்னம் படத்தின் ஹீரோயின் இவங்களா!

விஜய்சேதுபதி, மணிரத்னம் படத்தின் ஹீரோயின் இவங்களா!

Vijay Sethupathi and Mani Ratnam

விஜய்சேதுபதி தற்போது ஜெயிலர் 2 படத்தில் பிஸியாக நடித்துக்கொண்டுள்ளார், இதனைத் தொடர்ந்து அவர் மணிரத்னம் இயக்கத்தில் ஒரு காதல் படத்தில் நடிக்கவுள்ளார், மணிரத்னம் கடைசியாக இயக்கிய தஃ லைப் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைத் தரவில்லை, இதனால் மணிரத்னம் அவர்கள் தனக்கு பொருத்தமான காதல் ஜெர்னர் படம் ஒன்றை இயக்க முடிவெடுத்துள்ளார்.

இப்படத்தில் விஜய்சேதுபதி ஹீரோவாக நடிக்கவுள்ளார், இந்தக்கூட்டணி இணைவது இரண்டாவது முறையாகும், இதற்க்கு முன்பு செக்க சிவந்த வானம் படத்தில் விஜய்சேதுபதி இணைந்து நடித்திருந்தார். இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாகக் காத்திருக்கின்றனர்.

தற்போது இந்தப் படத்தை இன்று உறுதி செய்துள்ளது படக்குழு, இப்படத்தில் விஜய்சேதிபதிக்கு ஜோடியாகத் தமிழின் முன்னணி கதாநாயகியான திகழும் சாய்பல்லவி நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தின் இசை பணியை எ ஆர் ரஹமான் அவர்களுக்குத் தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *