Home » திடிரென அறிவிக்கப்பட்ட எல்.ஐ.கே (LIK) படத்தின் ரிலீஸ் தேதி!

திடிரென அறிவிக்கப்பட்ட எல்.ஐ.கே (LIK) படத்தின் ரிலீஸ் தேதி!

LIK - Tamil cinema

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ் ஜே சூர்யா, யோகி பாபு போன்ற நட்சத்திரங்கள் நடித்த படம் லைப் இன்சூரன்ஸ் கம்பெனி (LIK). இதற்க்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார், இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னரே பலமுறை தேதி அறிவிக்கப்பட்டு திரைப்படம் திரைக்கு வரவில்லை. சில பல காரணங்களால் ரிலீஸ் தேதி மாற்றிக்கொண்டு சென்ற படக்குழு தற்போது இறுதியாகத் திரைப்படம் வெளியாகும் தேதியை அறிவித்துள்ளனர்.

இப்படம் அடுத்த மாதம் ஏப்ரல் 3 ஆம் தேதி திரைக்கு வரும் என செவன் ஸ்க்ரின் ஸ்டூடியோஸ் வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளைப் படக்குழு தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *