நடிகர் தளபதி விஜய் அவர்கள் அரசியலுக்கு சென்றுவிட்டதால் தனக்கு ஜனநாயகம் படம் தான் கடைசி படம் என அறிவித்திருந்தார் ஆனால் அந்தப் படம் சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் இருப்பதால் அந்தப் படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகவில்லை, இதனால் ரசிகர்கள் மிகுந்த வேதனையுடன் இருக்கின்றனர்.
மேலும் அரசியலில் விஜய் அவர்கள் திமுக-வை விமர்சனம் செய்து பேசி வருகிறார், இதனால் விஜயின் படம், பாடல் ஏதும் சன் தொலைக்காட்சில் ஒளிபரப்பிவதில்லை என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து அரசுப் பள்ளி ஆண்டுவிழாக்களில் விஜயின் பாடல்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாம், இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனராம்.
இதேபோல் ஐபில் போட்டியைக் காண வரும் ரசிகர்கள் விசில் கொண்டுவருவதற்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அனுமதி இல்லையென அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



